சூ ரிய ஓரை : சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் , வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும் . உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல் , போன்ற காரியம் செய்யலாம் . சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடு , நிலம் , வண்டி வாகனம் , ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது . குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும் . புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம் . சுப காரியங்கள் செய்யலாம் . நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது . பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம் சந்திர ஓரை : வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது . இந்த ஓரைகளில் திருமணம் , சீமந்தம் , குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல் , பெண் பார்ப்பது , பதவியேற்பது , வேலைக்கு விண்ணப்பிப்பது , வங்கி கணக்கு துவங்குத...