சூரிய ஓரை :
சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள
சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற காரியம் செய்யலாம்.
சுக்கிர ஓரை :
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது.
குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும்
நன்மை ஏற்படும்
.புதன் ஓரை :
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப
காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர
உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்
சந்திர ஓரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது
.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல்,
பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல்
ஆகியற்றைச் செய்யலாம்
சனி ஓரை :
இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு
நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற
ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால்,
அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல்
பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது
.
குரு ஓரை :
எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை
ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும்
.செவ்வாய் ஓரை :
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/
பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ
உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்
.
மேலும் ஜோதிடம்- கைரேகை- வாஸ்து – எண்கணிதம் –அதிர்ஷ்டகல் பற்றிய குறும் செய்திகளை பற்றிய பயனுள்ள செய்திகளை தொடர்ந்து கூறப்போகிறார்
அதிஷ்டகல் நிபுணர்: மதுரை M. மீனாட்சிசுந்தரம் M.A, MSc, M.Phil cell: 9894541577
கருத்துகள்
கருத்துரையிடுக