முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராகு -கேது கட்டுரை

                                  சதயம் M.மீனாட்சி சுந்தரம்  m.phil  Astro
                                                                                  சதயம் உயர்தர நட்சத்திர ஜோதிட ஆராய்ச்சி மையம்
                               செல்: 9894541577
       இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் மட்டும் ராகு-கேது சப்த கிரகங்களான சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,வியாழன்,சுக்கிரன், சனி யுடன் சாயா கிரகங்களாக சேர்க்கப்பட்டு ராகு/கேது களுக்கு நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டு ராசிகள் கொடுக்கப்படாமல் பாவ கிரகங்களின் வரிசையில் இவைகள் இணைக்கப்பட்டு அவற்றிக்கான நகர்வு காலங்களாக ராகு 18 வருடமும் கேதுவுக்கு 7 வருடங்கள் விம்சோத்தரி தசா காலங்களை கொடுத்துள்ளது நமது இந்திய ஜோதிடமான வேத ஜோதிடத்தின் சிறப்பாகும். பாவ கிரகங்களின் வரிசையில் ராகு/கேது இடம்பெற்று இருந்தாலும் ராகுவை  இக லோகத்திற்கு சிறப்பு செய்யும் யோக தன்மையை தருவதற்கு வலிமையான நிழற் கிரகமாகவும்.
கேது:
பரலோகத்திற்க்கான ஞான தேடல்களுக்கும் இறை சிந்தனைக்கும் சிறப்பு செய்யும் யோக தன்மையை தருவதற்கு வலிமை பெற்ற நிழற் கிரகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
ராகு:
       சந்திரனின் வட முனையும், கேது-தென் முனையும் குறிக்கும் வெட்டு புள்ளிகளாக கண்களுக்கு தெரியாத கிரகங்களாக(நிழற்) நம் ஜோதிட சாஸ்திரத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளுதல் அவசியமானதாகும். ராகு-கேது இவற்றிற்கு சர்ப்பத்தில் உருவகத்தை கொடுத்துள்ளனர்.
       சூரியன ஆன்மாவாகவும்-சந்திரன் மனித உடல் (ம) மனதை ஆளுமை செய்யும் கிரகங்களாகும்.
       ராகு என்பது மனதில் உள்ள எதிர் நோக்கும் சவால்களையும் உடல் ரீதியான பிரச்சனைகளையும் குறிக்கும்.
       கேது என்பது முந்தைய ஜென்ம தொடர்புடைய ஆழமான விஷயங்களை பற்றியது.
ரிக்வேதத்தில்(5.3.8) ராகுவை ஸ்வர்பானு என்னும் அசுரனை குறிக்கும் உருவக சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்வர்பானு’ என்ற சொல் ‘பிரகாசமான பிரகாசம்’என்று பொருள் ராகுவின் இயல்பை கருத்தில் கொண்டால் இது முரண்பாடானதாகவே தோன்றும்.
       ராகு மாயையான மனநிலையுடன் பொருத்தமுடையதாக உள்ளது.
சூரியனையே மறைக்கும் ஆற்றல்(கிரகணம்) ராகு(மாயை மனதிற்கு) உள்ளதாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதை எடுத்து கொள்ளுதல் வேண்டும்.
ராகு- விரிவுபடுத்துதல், கேது-சுருக்குதல் தன்மையுடையதாகும்.
ராகு-வெகுஜன பிரபலங்களை குறிக்கும்.
       வெகுஜன போக்குகள்,நுகர்வோர் மீது கவர்ச்சியான சிந்தனைகள் மூலம் கேதுவின் உணர்வு வெளிப்பாடுகளை தடுக்கிறது. பிரமாண்டங்களை உருவக்குதல் அதன் மூலம் மனிதர்களை ஆளுமை செய்தல் மாயை மூலம் மயக்க வைத்தல் உலகின் செல்வாக்கு மற்றும் விருப்பத்தை  வலுப்படுத்துவதில் ராகுவின் செயல் மனிதர்களுடைய எதிர்ப்பார்ப்புகள் மதிப்பு மிக்க பல விஷயங்களுக்கும் ஒரு ‘நிழல்’ சக்தியை கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை. இன்று உலகமே ராகுவின் சிறப்பான அம்சங்களை தழுவியதாக உள்ளது.
கேது- ஒரு தனி மனிதன் (அ) சமுதாய கூட்டங்கள், ராகுவின் அபிலாஷைகளிலிருந்து விடுபடும். எண்ணங்களுடன் மாயை விலக்கும் சிந்தனைகளுடன் கூடிய போராட்டங்களையும் (அ) ராகுவின் செல்வாக்கு மிகுந்த தன்மைகளுக்குள் உட்செல்ல முடியாத நிலைகளில் தவிக்கும் மனநிலையில் வெகுஜன தன்மையில் இருந்து விடுபடும் போக்கிலோ அல்லது மனச்சோர்வு ஏற்படும் தன்மையை கொண்டு கடந்த கால (அ) மதம் (ம) தத்துவங்களை கையில் எடுத்து அதன் ஆழ்மான வழிக்குள் செல்லுவதையும் கேது வெளிப்படுத்துகிறது. தனக்கென தனிபாதையை மட்டுமின்றி புதிய கருத்தாக்கங்களை கேது வெளிப்படுத்துகின்றது.
முற்பிறவி,மறுபிறப்பு நம்பிக்கையானது நமது இந்து சமயத்தில் உள்ளது நமது ஜோதிடம் இந்து நம்பிக்கையுடன் தொடர்புடையது. மேலும் நம்முடைய வெத ஜோதிடம் கர்மாவின் அடிப்படையிலும் (ம) மோட்ச(இரட்சிப்பு) என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்த்துள்ளது. ஒரு மனிதனின் பூலோகத்தில் பிறப்பானது கடந்த பிறவியில் வாழ்ந்த வாழ்க்கையில் குவிக்கப்பட்ட செயல்கள் (சஞ்சிதகர்மா) அடிப்படயில் இப்பிறவியின் அமைப்பை வெளிப்படுத்துவது தான் ஜாதகமகும்.
கடந்த பிறவியில் குவிக்கப்பட்ட செயல்களின் விளைவுகளை எடுத்து அதன் வெளிப்பாடுகளின் தன்மைகளை கூறுவது நம் ஜோதிடத்தில் மட்டும் காணப்படுவது தான் ’தசா’ அமைப்பாகும். இது ‘கர்மாவின் வெளிப்பாடுகள்’ என்று நம்பபடுகிறது. இக் கர்மாவின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் நிழற் கிரகங்கள் தான் ராகு-கேது\
ராகு என்னும் சொல்லில்யிருந்து முதல் எழுத்தான ‘ரா’ வையும் , கேது=சிகி என்னும் மாற்று வார்த்தையிலுள்ள ‘சி’ என்னும் எழுத்தையும் இணைத்து ‘ராசி’ என்னும் சொல் உருவானது என பழைய ஜோதிட நூலில் படித்ததில் கிடைத்தது.
ராசி மண்டலம் ராகு-கேது வுக்குள் அடக்கம் என்பதை வெளிப்படுத்துகிறது.
ராகு/கேது நேர்-எதிர் தன்மையில் ஜாதகத்தில் அமைக்கப்படுவதன் நோக்கம்.
ஒருபிறவியின் நேர்-எதிர் தன்மைகளை அறிந்து தெளிந்து பலன் கூறுதல் அவசியமாகும் சீனாவின் “யின் – யாங்” என்னும் முறை ராகு/கேதுவின் வெளிப்பாடுகள் போன்று அமைந்திருப்பதை காணலாம்.
       ராகு/கேது பெயர்ச்சி
ஒரு ராசியில் ராகு/கேது 1 ½ வருடங்கள் சஞ்சரிக்கின்றன. ஒரு ராசியிலிருந்து மற்றொரு  ராசிக்கு செல்லும் காலத்தை பெயர்ச்சி என கூறப்படுகிறது. பெயர்ச்சியானது அடுத்த ராசிக்கு செல்லும் காலத்தை மட்டும் எடுக்காமல் நட்சத்திர வாரியாகவும் எடுத்து பார்க்கும் காலத்தில் உலகில் நடக்கும் பல நுட்பமான அதிர்வுகள் தரும் விஷயங்களும் ராகு-கேதுவின் ஜோதிட ரீதியான நகர்வுகளைக் கொண்டு அறியலாம்
தனிமனித வாழ்வில் ராகு-கேது
ராகு, கேதுவின் அச்சின் கீழ் தான் ஒரு ஜாதகம் இயங்கின்றது என்று கருத்தில் கொண்டு  ராகு-கேது அச்சுக்கு உள்ளே,வெளியே எந்த எந்த கிரகங்கள் அமைந்துள்ளது என்பதை குறித்துக் கொண்டு எந்த கிரகத்தின் காரகத்துவ வெளிப்பாடுகள் அந்த ஜாதகரிடத்தில் காணப்படுகிறது  என்பதை கொண்டு பலன் அறிதல் வேண்டும் இப்போது ராகு கேது அச்சுக்கு உள்ளே எது வெளியே எது என்ற கேள்வி எழும் ராகு பயணிக்கும் ராசிக்குள் இருக்கும் கிரகம் –உள்ளே என்றும் கேது பயணிக்கும் ராசி முதல் ராகு இருக்கும் ராசிக்குள் இருக்கும் கிரகங்கள் வெளியே உள்ளது என்றும் கணக்கிட்டுக் கொள்ளவும் மேலும் ராகு கேது நின்ற வீட்டதிபதிகள் ஜாதகத்திற்கு யோகத்தை கொடுப்பவர்களாக இருந்தால் ராகு தசை நடந்தால் பலன் இரட்டிப்பாக கொடுக்கும் இவற்றுடன் ராகுவை பார்க்கும் சுப கிரகங்களின் பலன்களையும்  கொடுக்கும் வலிமை ராகுவுக்கு உண்டு
கேது –ராகு பலன்களை அதிகப்படுத்தி கொடுப்பார் கேது சுப பலன்களை குறைத்து விடுவார்  அசுபகிரகங்களுடன் தொடர்பு இருந்தால் அசுப பலன்களை குறைக்கும் ஆற்றல் கேதுவுக்கு உண்டு
ஜோதிடர்களுக்கு கேதுவானவர் 2,6,10 மிடங்களுடன் தொடர்பு பெற்றியிருந்தால் சிறந்த ஜோதிடராக வலம் வருவார்
திருமணம் என்பது வாழ்நாளில் ஒரு மாற்றத்தின் செயல் இச்செயலுக்கு ராகு தொடர்பு இன்றி திருமணம் நடப்பதில்லை
ஏவல்,பில்லி, சூனியம், மாந்திரிகம் அருள்வாக்கு, மாய வித்தைகளுக்கு கேதுவே காரணகர்த்தாவாக செயல் படுவார்
ராகுவினால் பாதிப்பு உண்டானால் கருப்பு உளுந்து ஊரவைத்து ஆட்டுக்கு கொடுத்து வர ராகு தோசம் நீங்கும்
கேதுவினால் உண்டாகும் தோசத்திற்கு  குதிரைக்கு கொள்ளு அவித்து மெலிந்த குதிரைக்கு கொடுக்க தோசம் நீங்கும் மிருககாட்சி சாலைக்கு சிங்கத்தை பார்த்து வாருங்கள் வாழ்க்கையில் உடனடி தீர்வு கிடைக்கும்
ராகு-கேது உங்கள் ஜாதகத்தில் நிற்கும் நட்சத்திரங்களுக்கென்று தனித்தனி பரிகாரங்கள் மிக எளிய பரிகாரங்கள் உள்ளது அவற்றினை தனிக்கட்டுரையாக கொடுகின்றேன் பரிகாரங்கள் பலன் அளிக்குமா என்று பலரும் என்னிடத்தில் கேட்டுக்கும் போது  செய்து பாருங்கள் காரியம் நடந்தால் மறுபடியும் செய்யுங்கள் இல்லாவிட்டால் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி விடுவேன் ஆனால் அப்படிக்கேட்டவர்கள் பரிகாரத்தை நிறுத்தாமல் செய்துக்கொண்டு வருகிறார்கள்
கஷ்டங்களில் தவிப்பவர்கள் ,துன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பவர்கள், கடன் தொல்லகளில் மாட்டிக்கொண்டு அவதிப்படுபவர்கள், உடல் ரீதியான நோய்களிலும் மனரீதியான அவஸ்தைகளிலும் குடும்ப ரீதியான தொந்தரவுகளிலிருந்து விடுபட வைப்பவர் தான் உண்மையான ஜோதிடர் ஆவார் இவற்றிக்கு காரணம் ராகு-கேது தான் என்பதை கண்டு தீர்வு சொல்லுங்கள் வாழ்த்துக்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஷ கன்னிகா தோஷம்

விஷ கன்னிகா தோஷம் : விஷ கன்னிகா தோஷம் என்றால் என்ன ? ஜாதக ரீதியாக குறிப்பிட்ட கிழமை+திதி+ நட்சத்திரம் இணையும் காலங்களில் பிறக்கும் பெண்கள்  தோஷங்களுக்கு ஆளாகநேரிடும் இவ்வாறு உள்ள ஜாதகி இல்லற வாழ்வில் சுக படமுடியாது துர் பலன் அதிகம் காணப்படும் ஞாயிறு+த்விதீயை+ ஆயில்யம்,: ஞாயிறு+த்தூவதசி+விசாகம்

தானம் செய்ய உகந்த நாள் எது

                            தானம் செய்ய உகந்த நாள் எது தானம் செய்ய உகந்த நாள்:- உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்,நீங்க பிறந்த நட்சத்திரத்திலிருந்து 3 வது நட்சத்திரம், 6வது நட்சத்திரம், 9வது நட்சத்திரம் நாள்களில் தானம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும்         ஜென்மநட்சத்திரத்தில் செய்யும் தானம் புகழை தரும் ஏழ்மையை நீக்கும்          3வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் பகைமை நீங்கும், காரிய சித்தியாகும்,தடைகள் விலகும். 6வது நட்சத்திரத்தில்  தானம் செய்தால் நோய் நிவர்த்தியாகும் , போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம், கடன் தீரும் 9வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் சொத்து கிடைக்கும், பிரிந்த உறவுகள் இணையும்

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்

    விநாயகரின் மூல மந்திரம்   ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா   இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது. கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. விநாய...