பிரஹஸ்பதி ஸ்தோத்திரம்
ஸ்காந்த புராணத்தில் உள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் வயிற்றுவலி, குன்மம் முதலான ரோகங்கள் விலகும். பலம், பொருள், ஸந்தானம், தீர்க்காயுள் கிட்டும். பாவங்கள் விலகும். கோசார ரீதியாக 1, 3, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவனாக இருந்தாலும்... அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும்.
ஸ்ரீ கணேஸாய நம:
குருர்ப்ருஹ ஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸெளம்யமூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:
ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:
புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ:
குருர்ப்ருஹ ஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸெளம்யமூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:
ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:
புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ:
கருத்து:
குருவும், பிரஹஸ்பதியும், ஜீவனும், தேவர்களுக்கு ஆசார்யரும், புத்திமான்களுள் சிறந்தவரும், வாக்குக்கு ஈஸ்வரரும், புத்தி ரூபியும், நீண்ட தாடி, மீசை உள்ளவரும், பீதாம்பரம் தரித்தவரும், யௌவனம் உள்ளவரும்,அமிர்தமயமான பார்வை உள்ளவரும், கிரகங்களுக்குத் தலைவரும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், அழகிய உருவம் கொண்டவரும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவரும், மொட்டு போன்ற காந்தியுள்ளவரும், உலகங்களால் பூஜிக்கத் தகுந்தவரும், லோக குருவும், நீதிசாஸ்திரம் அறிந்தவரும், நீதியைச் சொல்கிறவரும், அங்கிரஸ்ஸினுடைய புத்திரரும், வேதங்களால் அறியத் தகுந்தவரும், பிதாமகனுமாகத் திகழும் குருவின் நாமங்களை படிப்பவர்கள் ஆரோக்கியமாகவும், பலவானாகவும், ஸ்ரீமானாகவும், புத்திரவானாகவும் திகழ்வார்கள். அத்துடன், அவர்கள் 100 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். பாவங்கள் விலகும். எவர் ஒருவர் வியாழக்கிழமையாகிய குருவாரம் அன்று சந்தனம், அக்ஷதம், வஸ்திரம் இவைகளாலும், புஷ்பம், தீபம் முதலான உபகாரங்களாலும் பிரஹஸ்பதியை பூஜிப்பாரோ, அவ்வாறு பூஜித்து பிராமணர்களுக்கு போஜனமும் செய்து வைக்கிறாரோ, அவருக்கு குருவினால் ஏற்பட்ட பீடைகளும் விலகும்.
நன்றி : சக்தி விகடன்
கருத்துகள்
கருத்துரையிடுக